How suruli rajan died
சுருளி ராஜன்
சுருளி ராஜன் (Suruli Rajan, 14 சனவரி 1938 – 5 திசம்பர் 1980) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.[1] இவருக்கு 1981-82 ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை
[தொகு]நடிகர் சுருளி ராஜன் தேனி மாவட்டம்பெரியகுளத்தில் 1938ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் சங்கரலிங்கம் ஆகும்.[2]சுருளி அருவியருகே இருந்த இவரது விருப்ப தெய்வமான முருகனின் திருப்பெயரிலான சுருளிவேலர் சுவாமி என்ற பெயரை இவர் திரையுலகிற்காக மாற்றி சுருளிராஜன் என்று வைத்துக் கொண்டார். இவரின் தந்தையார் பெயர் பொன்னையா பிள்ளை. இவர் அவ்வூரில் உள்ள விவசாயப் பண்ணையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்குப்பின் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து சிறு தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.
நடிப்பு
[தொகு]- இவர் தனது வாழ்க்கையை மதுரையில் வேலை பார்த்துக்கொண்டே தன்னார்வ நாடகங்களில் ஆரம்ப காலங்களில் நடித்தார்.
- ஆகையால் 1959 ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார்.
- அதன் பிறகு கலைஞரின் காகிதப்பூ என்ற நாடகத்தில் தேர்தல் நிதிக்காக நடித்தார்.
- பின்னர் தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்படக்கழகத்தால் எடுக்கப்பட்ட இரவும் பகலும் (1965) என்ற திரைப்படத்தில் நடித்தார்,
- அப்போதே "காதல் படுத்தும்பாடு" என்ற படத்திலும் நடித்தார். 1970 இல் திருமலை தென்குமரி, 1971 இல் ஆதிபராசக்தி என்ற படத்தில் சென்னை மீனவர் பேச்சுப்பேசி அனைவரையும் தன் பக்கம் திருப்பினார்.
- மேலும் இவர் தமிழ் திரையுலகில் 1970–1980 வரையிலான காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்தார்.
- பின்பு 1980 ஆம் ஆண்டு ம. எ. காஜாவின் மாந்தோப்புக்கிளியே என்ற படத்தில் கஞ்சன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரானார்.[3][4]
- மேலும் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நான் ஆணையிட்டால் பாடல் காட்சியில் எம்ஜிஆருடன் இணைந்து தோன்றும் ஒரு காட்சியில் சக நடிகராக சுருளிராஜன் நடித்திருந்தார்.
- அதன் பிறகு எம்ஜிஆருடன்தேர் திருவிழா (1968) என்ற ஒரே படத்தில் மட்டுமே நடித்தார்.
- பின்பு சிவாஜி கணேசன் உடன் அஞ்சல் பெட்டி 520 (1969), ராஜ ராஜ சோழன் (1973), மனிதரில் மாணிக்கம் (1973), ராஜபார்ட் ரங்கதுரை (1973), தங்கப்பதக்கம் (1974), அன்பே ஆருயிரே (1975), ரோஜாவின் ராஜா (1976), தீபம் (1977), இளைய தலைமுறை (1977), அண்ணன் ஒரு கோயில் (1977), என்னைப்போல் ஒருவன் (1978), லாரி டிரைவர் ராஜாகண்ணு (1981), சத்ய சுந்தரம் (1981) மற்றும் ஹிட்லர் உமாநாத் (1982) போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
- மேலும் சுருளிராஜன் தனது ஆரம்ப காலத்தில் இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் தவிர்க்க முடியாத நடிகராக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- அதில் சில குறிப்பிட்டதக்க திரைப்படங்கள் நான் (1967), மூன்றெழுத்து (1968), நீயும் நானும் (1968), அத்தை மகள் (1969), துலாபாரம் (1969), வீட்டுக்கு ஒரு பிள்ளை (1971), என்னைப்போல் ஒருவன் (1978) போன்ற திரைப்படங்கள் ஆகும்.
- பிறகு ஒளி பிறந்தது, மனிதரில் இத்தனை நிறங்களா, ஆறு புஷ்பங்கள், முரட்டுக்காளை, பைரவிபாலாபிசேகம், ஆறிலிருந்து அறுபது வரை, தாய் மீது சத்தியம், பொல்லாதவன், நான் போட்ட சவால் போன்ற பல குறிப்பிடதக்க படங்களில் நடித்துள்ளார்.
விருது
[தொகு]இவருக்கு 1981-82 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிரிப்பு நடிகர் பட்டத்தை தமிழக அரசு வழங்கி சிறப்பித்தது.
மரணம்
[தொகு]சிரிப்பு நடிகர் சுருளி ராஜன் தனது புகழின் உச்சியில் இருந்த போது 1980 ஆம் ஆண்டு 42 வயதில் மரணமடைந்தார்.[5]
நடித்த திரைப்படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]Bosco choreographer wiki Bosco–Caesar is an Indian choreographer duo who work in Indian films. They are Bosco Martis and Caesar Gonsalves, who have together worked on 200 songs and about 75 films. [1] They run the Bosco Caesar Dance Company in Brampton (Canada), Scarborough (Canada), Mumbai, Phoolbagan, and Salt Lake in Kolkata. [2] Bosco-Caesar in 2012.